சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/பட்டாசு தொழிலாளர்களின் குடும்ப நலனுக்காக ‘உயிர்’ அறக்கட்டளை – இலச்சினை வெளியீடு!
அரசியல்

பட்டாசு தொழிலாளர்களின் குடும்ப நலனுக்காக ‘உயிர்’ அறக்கட்டளை – இலச்சினை வெளியீடு!

🕒 11 செப்., 2026, 06:53 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
பட்டாசு தொழிலாளர்களின் குடும்ப நலனுக்காக ‘உயிர்’ அறக்கட்டளை – இலச்சினை வெளியீடு!

AI Highlights

  • விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளர்களின் குடும்ப நலன் மற்றும் மறுவாழ்வுக்காக உருவாக்கப்பட்டுள்ள "உயிர்" அறக்கட்டளையின் இலச்சினையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளர்களின் குடும்ப நலன் மற்றும் மறுவாழ்வுக்காக உருவாக்கப்பட்டுள்ள "உயிர்" அறக்கட்டளையின் இலச்சினையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெற்றோர் களை இழந்த 79 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப் பட்டது. மேலும் இருவருக்கு கல்லூரி உதவித்தொகை ₹18 ஆயிரம் காசோலையாக வழங்கப்பட்டது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் மிகவும் பிரதான மான தொழிலாக விளங்கி வருகிறது எனவும் பட்டாசு ஆலைகளில் எதிர்பாராதவிதமாக ஏதேனும் விபத்து நேரிட்டால், 'நீங்கள் தனி ஆள் அல்ல; உங்களுடன் அரசும், மாவட்ட நிர்வாகமும், ஆலை உரிமையாளர்களும், தொழிலாளர் களும் துணையாக இருக்கிறோம்' என்ற பாதுகாப்பை உறுதி செய்வது தான் இந்த 'உயிர்' அறக்கட்டளை யின் முதன்மை நோக்கம் ஆகும். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி நீங்கள் அனைவரும் என் குழந்தைகள் எனவும் நான் வார்த்தைக்காக சொல்லவில்லை. நீங்கள் அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும். உங்களுக்கு எந்த நேரத்தில் எந்த உதவி தேவைப் பட்டாலும் என்னிடம் தயக்கமின்றி கேளுங்கள், கண்டிப்பான முறையில் உதவி செய்வேன் என்றார். மேலும் பேசிய ஜெகதீஸ்வரி பணி மாறுதலில் செல்ல இருக்கும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா விருதுநகர் மாவட்டத்தை விட்டு செல்வது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றார். மேலும் நான் சட்டமன்ற உறுப்பினர் ஆகவும் பின்னர் அமைச்சராக பொறுப்பேற்ற நேரத்திலும் எனக்கு தேவையான நல் வழிமுறை களையும், அறிவுரைகளையும் வழங்கி ஒரு சிறந்த ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் சுகபுத்ரா இருந்தார் என்றார். மேலும் அவர் இந்த விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரிடமும் ஒரு தந்தையைப் போல அன்போடு பழகியவர் என்றார். மேலும் ஒரு நல்ல ஆட்சியரை விருதுநகர் மக்கள் பெற முடிந்தது. அவர் பணி மாறுதலில் சென்றாலும், நமது சமூக நலத்துறையின் கீழ் இணைந்து பணியாற்ற வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைப்பேன் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔